
புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய ரத்த பரிசோதனை முறை; இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்டி மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரத்தப் பரிசோதனை, புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முறையை மாற்றக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளியின் டிஎன்ஏவைப் படிப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையை நோயாளிக்கு ஏற்ற வகையில் கொடுப்பதை இலக்கு வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் சிறந்த சிகிச்சையை அடையாளம் கண்டு வழங்க முடியும்.
இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், புதிய செயல்முறை இங்கிலாந்தின் தேசிய பொது சுகாதார சேவைகளின் வழக்கமான பகுதியாக மாறக்கூடும்.
துல்லிய மருத்துவம்
டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட சிகிச்சை முறை
ஆராய்ச்சியில் பங்குபெற்றுள்ள முன்னணி ஆய்வாளர் டாக்டர் மேத்யூ கிரெப்ஸ், ஸ்கை நியூஸிடம் கூறுகையில், இந்த ஆராய்ச்சி பரந்த அளவிலான புற்றுநோய் நோயாளிகளுக்கு துல்லியமான மருத்துவத்தை கொண்டு வருகிறது என்றார்.
இந்த நுட்பம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட அணுகுமுறையை செயல்படுத்துகிறது என்று டாக்டர் கிரெப்ஸ் வலியுறுத்தினார்.
பொதுவாக கீமோதெரபி வகை மருந்துகளுடன் சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக, நோயாளிக்கு அவர்களுக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
இது புற்றுநோய் நோயாளிகளுக்கு மரபணு மற்றும் டிஎன்ஏ சோதனை பயாப்ஸிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வழக்கமான வலி மிகுந்த முறைகளிலிருந்து விலகலைக் குறிக்கிறது.
சோதனை
சோதனை நோயாளியின் முடிவுகளை மேம்படுத்தக்கூடும் என எதிர்பார்ப்பு
கிறிஸ்டி அறக்கட்டளை மற்றும் சர் பாபி ராப்சன் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படும் டார்கெட் நேஷனல் ஆய்வு, இந்த ஆராய்ச்சியில் 6,000 நோயாளிகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திரவ பயாப்ஸி நோயாளியின் விளைவுகளை மேம்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதே ஆராய்ச்சியின் குறிக்கோளாகும்.
எனினும், இந்த ரத்த பரிசோதனை முறை அனைவருக்கும் வேலை செய்யாது என்று டாக்டர் கிரெப்ஸ் ஒப்புக்கொண்டார்.
ஆனால் ஏற்கனவே மேம்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் மருந்து சோதனைகளுக்கு ஏற்றவாறு மாற உதவியுள்ளது என மேலும் தெரிவித்தார்.