
ரியல்மீயின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்... 'ரியல்மீ C55' எப்படி இருக்கிறது?
செய்தி முன்னோட்டம்
C33 மாடலுக்கு மாற்றாக, C35-ன் அப்கிரேடாக C55 மாடல் ஸ்மார்ட்போனைக் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. ஆப்பிளின் டைனமின் ஐலேண்டே போலவேயான மினி கேப்சூல் வசதியையும் இதில் கொடுத்திருக்கிறது ரியல்மீ. இந்த என்ட்ரி லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது?
வசதிகள்:
6.72 இன்ச் LCD டிஸ்பிளே
ஹீலியோ G88 ப்ராசஸர்
64MP+2MP ரியர் கேமரா: 8MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 13
4G வசதி
விலை: 4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.10,999
6 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.11,999
8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.13,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
பார்த்தவுடன் கவரும் வகையில் இருக்கிறது C55-ன் டிசைன். பட்ஜெட் ஸ்மார்ட்போனின் டிசைன் போல இல்லாமல் நல்ல ப்ரீமியம் போன் போன்ற உணர்வைக் கொடுக்கிறது இதன் டிசைன்.
இதன் ப்ரசாஸரின் செயல்திறன் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. தினசரிப் பயன்பாட்டிற்கும் மிகவும் சுமாரன செயல்திறனையே வெளிப்படுத்துகிறது.
பேட்டரியும் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. தினசரிப் பயன்பாட்டில் 1 நாளுக்கும் குறைவாகவே நீடிக்கிறது இதன் பேட்டரி.
ஆனால், இதன் 33W சார்ஜர் ஒரு மணி நேரத்திற்கும் கொஞ்சம் கூடுதலான நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடுகிறது.
கேமராவின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. எனினும், இரவு நேரப் பயன்பாட்டிற்கு கொஞ்சம் சுமார் தான்.
5G வசதி இல்லாததும் மைனஸ்.