தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவிலும் வங்கிகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் வங்கிகளுக்கு என்னாகுமோ? என்ற பொது அச்சம் நிலவி வருகிறது.
இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவிக்கையில், அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கியில் ஏராளமான டெபாசிட்டர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டதால் சிலிக்கான் வேலி வங்கி நெருக்கடியில் சிக்கியது.
வங்கியின், சொத்துக்களும் கடன்களும் பொருந்தாமல் போனதே வங்கி காலியாக காரணம்.
இதனாலே சிலிக்கான் வங்கி மூடப்பட்டது. அடுத்து நியூ யார்க்கை சேர்ந்த சிக்னேச்சர் வங்கியும் திவாலானது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய வங்கிகள் திவாலானால் என்ன செய்யலாம்? கவர்னரின் பதில்
இதனால் பல்வேறு வங்கிகள் பங்கு விலை சரிந்தன. ஐரோப்பாவில் பிரபல கிரெடிட் சூயிஸ் வங்கியும் நெருக்கடியில் சிக்கிதால், சுவிஸ் நேஷனல் வங்கி அந்த வங்கியை காப்பாற்றுவதற்கு முன் வந்தது.
இந்த சூழலில் தான் இந்திய வங்கிக்கும் ஆபத்து உள்ளதா? என கேள்விகள் எழும்ப, தற்போது இந்திய வங்கி துறை நிலையானதாக இருப்பதாகவும்,
சர்வதேச வங்கி துறையில் நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய வங்கி துறை பாதிப்படையவில்லை எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் நடந்ததை போல சொத்து - கடன் பொருந்தாமை ஏற்படாதவாறு இந்திய வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தியுள்ளார்.