திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவாலானதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒன்று தான் சிலிக்கான் வேலி வங்கி.
இந்த வங்கியானது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கடந்த் மார்ச் 10ஆம் தேதி திவாலாகி மூடப்பட்டது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாக சிலிக்கான் வேலி வங்கி கடந்த நாட்களுக்கு முன் வங்கிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்த வாரம் வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்டது.
இத்தகவல் பெரிய பரபரப்பை ஏற்படுத்த, தற்போது சிலிக்கான் வேலி வங்கியில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பணம் 100 கோடி டாலர் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சிலிக்கான் வேலி வங்கி
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு - நிதியமைச்சர் கருத்து
மேலும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடல் கடந்து வெளிநாட்டு வங்கிகளை சார்ந்திருப்பதற்கு பதிலாக இந்திய வங்கிகளிலேயே சேவைகளை பயன்படுத்துவதற்கான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என மத்திய ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 100-க்கணக்கான இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் 100 கோடி டாலருக்கு மேல் பணம் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்.