NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'
    அடுத்த செய்திக் கட்டுரை
    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'
    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'

    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 26, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    குவால்காம் நிறுவனமாது ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சிப்செட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஹாவாயில் கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் குவால்காம் நிறுவனம் நடத்தி வருகிற 'ஸ்னாப்டிராகன் சம்மிட்' நிகழ்வு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அந்த நிகழ்விலேயே இந்தப் புதிய சிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம்.

    'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' மற்றும் 'ஸ்னாப்டிராகன் X எலைட்' ஆகிய இரண்டு புதிய ஃப்ளாக்ஷிப் ப்ராசஸர்களை ஸ்னாப்டிராகன் சம்மிட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம்.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் பெருகத் தொடங்கியிருக்கும் நேரத்தில், அதற்கேற்ப தங்கள் இலக்கையும் மாற்றி புதிய தயாரிப்பை வடிவமைத்திருக்கிறது குவால்காம்.

    பெருகி வரும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ப மேம்பாடுகளுடன் கூடிய சிப்பாக மேற்கூறிய இரண்டு சிப்களையும் வடிவமைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.

    குவால்காம்

    ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3': 

    செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகளையும் சிரமமின்றி மேற்கொள்ளும் வகையிலான வசதிகளைக் கொண்ட சிப்புடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது கூகுள்.

    அந்த வரிசையில் தற்போது குவால்காமும் இணைந்திருக்கிறது. அதிக ப்ராசஸிங் பவர் தேவைப்படும் ஸ்டேபிள் டிஃப்யூஷன் வகை AI புகைப்படங்களை நொடிகளில் உருவாக்கும் திறனுடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3யை உருவாக்கியிருக்கிறது குவால்காம்.

    மேலும், இந்த நிகழ்வில் மெட்டாவின் Llama 2 மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மெய்நிகர் உதவியாளரையும் காட்சிப்படுத்தியிருக்கிறது குவால்காம். இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் இயங்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட AI கருவிகளை பிற நிறுவனங்களால் உருவாக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    ஸ்னாப்டிராகன்

    கணினிகளுக்கான குவால்காமின் 'ஸ்னாப்டிராகன் X எலைட்': 

    இதுவரை பெரும்பான்மையாக ஸ்மார்ட்போன் சிப்களை மட்டுமே தயாரித்து வந்த குவால்காம், இந்த 'ஸ்னாப்டிராகன் X எலைட்' சிப்பின் அறிமுகத்தின் மூலம் கணினிகளுக்கான சிப் சந்தையிலும் நுழைகிறது.

    கணினிகளுக்கான சிப்களைத் தயாரிக்கும் இன்டெல் நிறுவனத்தின் ப்ரீமியமான i7 10-கோர் மற்றும் 12-கோர் சிப்களுடன் ஒப்பிடும் போது தங்களுடைய புதிய ஸ்னாப்டிராகன் X எலைட் சிப்பானது இருமடங்கு செயல்திறனைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.

    ஆப்பிள் மற்றும் இன்டெல்லின் பல்வேறு சிப்களை விட விரைவான செயல்திறனை தங்களுடைய புதிய சிப் வெளிப்படுத்தும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த கணினிக்கான சிப்பையும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையிலேயே குவால்காம் நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஸ்மார்ட்போன்

    ஓப்போ, மோட்டோரோலா, சாம்சங்.. ஃப்ளிப் போன் செக்மண்டில் அதிகரித்திருக்கும் போட்டி சாம்சங்
    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் அமெரிக்கா
    இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் கேட்ஜட்ஸ்
    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் ரெட்மி

    செயற்கை நுண்ணறிவு

    பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் சாட்ஜிபிடி
    CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி? மத்திய அரசு
    பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்! சாட்ஜிபிடி
    கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் கூகுள்

    தொழில்நுட்பம்

    நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ

    தொழில்நுட்பம்

    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம் கூகுள்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் அறிவியல்
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF கேட்ஜட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025