கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
சாட்ஜிபிடி ஆனது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் கொலை வழக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்ய சாட்ஜிபிடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இரு மாநில உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அனைத்து தரப்பையும் கேட்ட நீதிபதி கொலை செய்வதே குற்றம். கொடூரமாக கொலை செய்யப்பட்டால் அதை விட கொடூரமான குற்றம் என தெரிவித்தார்.
இதனால், ஜாமீன் வழங்கும் பார்வைக்கு சாட்ஜிபிடி-யிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சாட்ஜிபிடி, கொடூர தாக்குதலுக்கு ஜாமீன் வழங்குவது வழக்கின் சூழ்நிலைகளையும், வழக்கை விசாரிக்கப்படும் அதிகார வரம்பில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பொறுத்தது என கூறியுள்ளது.
சாட்ஜிபிடி
ChatGpt-யின் பதிலைக் கேட்டுவிட்டு கொலை வழக்குக்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
தொடர்ந்து, கொலை மற்றும் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டால் அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள், அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
எனவே இதுபோன்ற வழக்குகளில் நீதிபதி ஜாமீன் வழங்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
ஜாமீன் கேட்பவரிடம் குற்றம் வரலாறு மற்றும் எதிர்ப்பு சாட்சியங்களின் வலிமையை கொண்டு ஜாமீன் வழங்கலாமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
ஆனால், நீதிமன்றம் இதற்கு சாட்ஜிபிடியின் பதிலை ஏற்காமல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
அத்தோடு வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டது.
எனவே சாட்ஜிபிடியின் பதிலையும் கருத்தில் கொள்ள நீதிமன்றம் பயன்படுத்தியது பேசும் பொருளாகவே மாறியது.