போகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
ஃபவர்புல்லான ப்ராசஸர், குறைவான விலை என்பது தான் போகோ F-சீரிஸின் தாரக மந்திரம். 2018-ல் வெளியான F1-ல் இருந்தே இதனைப் பின்பற்ற வருகிறது போகோ. அந்த சீரிஸின் புதிய F5 மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
குவால்காம் ஸ்னார்டிராகன் 7+ ஜென் 2 ப்ராசஸர்
64MP+8MP+2MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆண்ட்ராய்டு 13
5G வசதி
விலை:
8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.29,999
12 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.33,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
முந்தைய மாடலான F4-ல் கிளாஸ் பேக் பேனலைக் கொடுத்து விட்டு, இந்த புதிய மாடலில் பிளாஸ்டிக் பேக்கையே கொடுத்திருக்கிறது போகோ. இதனால், முந்தைய போனில் கிடைத்த ப்ரீமியம் ஃபீல் இந்த போனிஸ் இல்லை.
மிகவும் சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது போகோ F5. பேட்டரி பெர்ஃபாமன்ஸூம் வேற லெவல். அதிகளவில் கேம்களை விளையாடியனாலும் கூட ஒரு நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கிறது இதன் பேட்டரி.
இந்த போகோ சறுக்கிய இடம் கேமரா தான். ஓகேவான கேமரா பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த போகோ F5.
டிசைன் மற்றும் கேமரா முக்கியமில்லை என்பவர்கள் இந்த போகோ F5-வை பரிசீலைனை செய்யலாம். ஆனால், இந்த பட்ஜெட்டில் அனைத்து வசதிகளும் சிறப்பாக வேண்டும் என்பவர்கள் நத்திங் போன் (1)-ஐ பரிசீலனை செய்யலாம்.