POCO, ஏர்டெல் இணைந்து இந்தியாவில் மலிவான 5G போன் தயாரிக்க திட்டம்
சமீபத்தில், POCO இன் இந்தியத் தலைவரான ஹிமான்ஷு டாண்டன், இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது குறித்த தகவல்களை வெளியிட்டார். எக்ஸ்-இல் ஒரு உரையாடலில், ஹிமான்ஷு டாண்டன், POCO மற்றும் Airtel இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். வரவிருக்கும் மொபைல் சாதனம், ஏற்கனவே இருக்கும் மாடலின் மாறுபாடாக இருக்காது என்றும் அவர் கூறினார். இருப்பினும், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அதன் அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. வரவிருக்கும் மலிவு விலை 5G போன், POCO Neo அல்லது F6 தொடரைச் சேர்ந்ததாக இருக்காது என்று ஒரு பயனரால் கேள்வி கேட்கப்பட்டபோது டாண்டன் தெளிவுபடுத்தினார்.
மார்க்கெட்டில் உள்ள மற்ற 5ஜி மலிவு விலை போன்கள்
இதற்கு முன்னரே, POCO, C51 மாடலை, ஏர்டெல் உடன் இணைந்து வெளியிட்டிருந்தது. அப்போது அதை வாங்குபவர்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரத்யேக ஏர்டெல் சலுகைகளை வழங்கியது. ஆனால் இந்த புதிய சாதனம் முற்றிலும் மாறுபட்ட மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவில் மிகவும் மலிவு விலை 5G போன் என்ற பெருமையை பெறவுள்ளது. அதேநேரத்தில், Qualcomm உடன் இணைந்து, Reliance Jio 5G போனை உருவாக்கி வருகிறது. அதன் விலை ரூ.8,000. JioPhone 5G என அழைக்கப்படும் இந்தச் சாதனம், SA-2Rx திறன் கொண்ட குறைந்த விலை தனிப்பயன் சிப்செட்டை இந்த போன் கொண்டுள்ளது. அதனாலேயே குறைந்த விலை. வரவிருக்கும் POCO ஸ்மார்ட்போனின் குறிக்கோள், 2G பயனர்களை 5G-இயக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதாகும்.