டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்
'அபெக்ஸ்' என்று அன்புடன் பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸின் புதைபடிவ எச்சங்கள் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் $44.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன. அதன் விற்பனை மதிப்பீடான $4-6 மில்லியனை விட அதிக விலைக்கு விற்பனையான இந்த ஏலப்பொருள், டைனோசர் புதைபடிவங்களுக்கான புதிய சாதனையை படைத்தது. முந்தைய சாதனையாக "ஸ்டான்" என்ற டைரனோசொரஸ் ரெக்ஸ் புதைபடிவம், 2020 இல் $31.8 மில்லியன் ஈட்டியது. அபெக்ஸின் கிட்டத்தட்ட முழுமையான புதைபடிவமானது 2022ஆம் ஆண்டில் கொலராடோவின் டைனோசர் நகருக்கு அருகிலுள்ள வணிக பழங்கால ஆராய்ச்சியாளர் ஜேசன் கூப்பருக்கு சொந்தமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி அளவும் கொண்ட அபெக்ஸ், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
'Apex' ஐ அமெரிக்க நிறுவனம் ஆராய்ச்சிகளுக்கு கடனாக பெறலாம்
இந்த மதிப்புமிக்க புதைபடிவத்தை சிட்டாடல் எல்எல்சியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமெரிக்க பில்லியனர் கென் கிரிஃபின் வாங்கினார். டைனோசர் புதைபடிவங்களின் விற்பனையானது, இத்தகைய உயர் ஏல விலைகளை வாங்க முடியாத அருங்காட்சியகங்கள் அல்லது ஆராய்ச்சி மையங்களில் இந்த மாதிரிகள் வைக்கப்பட வேண்டும் என்று நம்பும் கல்விசார் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தூண்டுகிறது. இந்தக் கவலைகளுக்கு விடைதரும் வகையில், இந்த புதைவடிவத்தை வாங்கியவர் அமெரிக்க நிறுவனத்திற்கு அபெக்ஸைக் கடனாகப் தந்து, ஆராய விரும்புவதாக ஏல நிறுவனமான Sotheby's வெளிப்படுத்தியது