NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்
    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்

    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 31, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்மார்ட்போன் குறுஞ்செய்தி வசதியில், பயனர்களுக்கு ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான குறைபாடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சி மாணவர் குழு ஒன்று கண்டறிந்திருக்கிறது.

    அதாவது குறுஞ்செய்தி சேவையில் உள்ள ஒரு அம்சத்தை வைத்து வெறும் மொபைல் எண்ணை மட்டும் கொண்டு ஒருவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

    அமெரிக்காவின் வடகிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவாஞ்சிலோஸ் பிட்சிகாஸ் என்ற ஆராய்ச்சி மாணவர் தலைமையிலான குழு இந்த குறைபாட்டைக் கண்டறிந்திருக்கிறது. ஆனால், இதுவரை இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி எந்த விதமான மோசடிச் செயல்களும் அரங்கேறவில்லை.

    1990-களில் இருந்தே மொபைல்களில் குறுஞ்செய்தி சேவை வழங்கப்பட்டு வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 2G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குறுஞ்செய்தி சேவையை பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாக மாற்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டன.

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்போன் குறுஞ்செய்தி சேவையில் உள்ள குறைபாடு: 

    புதிதாகக் கொண்டுவரப்பட்ட வசதிகளில் ஒன்று, நாம் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி சென்று சேர்ந்துவிட்டதா இல்லையா என்பதை அனுப்பியருக்கு தகவல் தெரிவிக்கும் வசதி.

    இந்தத் தகவல் தெரிவிக்கும் முறையைக் கொண்டு ஒருவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறது மேற்கூறிய அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் குழு.

    ஒரு மொபைல் எண்ணுக்கு தொடர்ச்சியாக பல்வேறு குறுஞ்செய்திகளை அனுப்பி, அது சென்று சேர்ந்து விட்டதா என்று அனுப்பியவர் பெறும் தகவல் எவ்வளவு நேரத்தில் வருகிறது என்ற தகவல்களைப் பெற்று, அதனை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியுமாம்.

    குறுஞ்செய்திகள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருந்தாலும் இந்த முறையைப் பயன்படுத்தி இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஸ்மார்ட்போன்

    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஆப்பிள்
    12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி ரெட்மி
    புகாட்டி சூப்பர் கார்களை BGMI ஸ்மார்ட்போன் கேமில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கிராஃப்டான் கேம்ஸ்
    இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன் விவோ

    அமெரிக்கா

    இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களா: சர்ச்சையான கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இந்தியா
    ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025