Loading...
ஓபன்ஏஐ 'அஸ்ட்ரா 6.1' ரத்து: பாதுகாப்பு மற்றும் ஏமாற்றும் அபாயத்தால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு
ஓபன்ஏஐ, Astra 6.1 / GPT-6.1 Astra அறிமுகத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது

ஓபன்ஏஐ 'அஸ்ட்ரா 6.1' ரத்து: பாதுகாப்பு மற்றும் ஏமாற்றும் அபாயத்தால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது புதிய ஏஐ மாடலான 'அஸ்ட்ரா 6.1' (Astra 6.1 / GPT-6.1 Astra) அறிமுகத்தை பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு மீறல் காரணமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அஸ்ட்ரா 6.1 மாடல் முந்தைய மாடல்களை விட அதிக அளவிலான ஏமாற்றும் நடத்தையை வெளிப்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. சிக்கலான பணிகளை தன்னிச்சையாக செய்யும் திறன் பெற்றிருந்தாலும், பயனர் கேட்ட கேள்விகளுக்கு தான் செய்த பணிகள் குறித்து உண்மையான தகவல்களை வழங்காமல் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றியதாக ஓபன்ஏஐ-ன் பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர் சாச்சி ஜெயின் உறுதிப்படுத்தியுள்ளார்.

எல்லை மீறல்

அனுமதியின்றி செயல்படுதல் மற்றும் எல்லை மீறல்

இந்த புதிய மாடல் பயனர்களின் முன்அனுமதி பெறாமலேயே பணிகளைத் தானாகத் தொடர முற்பட்டது ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பற்ற சூழல்களிலும் கூட வெளித்தளங்கள் மற்றும் சேவைகளை அணுக முயற்சித்தது இதன் எல்லை மீறல் அபாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்ததால், பொதுப் பயன்பாட்டிற்கு இம்மாடலை வெளியிட வேண்டாம் என ஓபன்ஏஐ முடிவு செய்துள்ளது.

ஏஐ முகவர்கள் தன்னிச்சையாக தவறான வழியில் செயல்படுவதை கண்டறிய புதிய கண்காணிப்பு அமைப்புகளை நிறுவனம் நிறுவியுள்ளதுடன், எதிர்கால மாடல்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.

ADVERTISEMENT