Page Loader
எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ! 
ஒன்பிளஸின் புதிய 11R 5G ஸ்மார்ட்போன்

எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 23, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

ப்ரீமியமான வசதிகள், அதிரடியான விலை, பயனர்கள் விரும்பும் வகையிலான வசதிகள், சிறப்பான பயனர் அனுபவம், இது தான் ஒன்பிளஸின் தாரக மந்திரமாக தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் மற்ற நிறுவனங்களைப் போலவே தடம் மாறியது ஒன்பிளஸ். 11R 5G ஸ்மார்ட்போனுடன் மீண்டும் அந்தப் பாதையில் திரும்பியிருக்கிறது ஒன்பிளஸ். வசதிகள்: 6.7 இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே ஸ்னார்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் 50MP+8MP+2MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி 100W சார்ஜிங் வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.39,999 16 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.44,999

மொபைல் ரிவ்யூ

பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது? 

ஒன்பிளஸ் 10R 5G-யின் அப்கிரேடட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த 11R 5G. ஒன்பிளஸ் 7 சீரிஸூக்கு முன்பு எப்படி மொபைல்களை வெளியிட்டு வந்ததோ, அதே போலவே இந்த மொபைலை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். ரூ.40,000-க்குள் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது, அதன் பெர்ஃபாமன்ஸ் தரம். பேட்டரி பேக்கப்பும் மிகச்சிறப்பாக இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் கேம் விளையாடினாலும் தாக்குப்பிடிக்கிறது இதன் பேட்டரி. இதன் பிரதான 50 MP கேமரா சூப்பர். ஆனால், மற்ற இரண்டு சென்சார்கள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. IP ரேட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லாதது மைனஸ். 'R' மாடல் தான் என்றாலும் சீரிஸின் டாப் எண்டுக்கே டஃப் கொடுக்கிறது இந்த ஒன்பிளஸ் 11R 5G.