
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்
செய்தி முன்னோட்டம்
1969 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முதலில் கால் பதித்த பிறகு, நிலவினை நோக்கி பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் நிலவினை நோக்கி அனுப்பப்பட்டன.
அதன் பின்னர், கிட்டதட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல காரணங்களுக்காக நிலவு ஆராய்ச்சிக்கான அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலங்கள் இடைநிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் நிலவு ஆராய்ச்சியை துவங்கியுள்ளது அமெரிக்கா.
50 ஆண்டுகளுக்கு பிறகு, நாசா, தனியார் நிறுவனமான இன்ட்யுட்டிவ் மெஷின் உடன் இணைந்து, தற்போது நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டாலும், தென் துருவப் பகுதியில் இருந்து அது அனுப்பும் சிக்னல் பலவீனமாக உள்ளது என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசியஸ்
ஒடிசியஸ் எங்கு தரையிறங்கியது?
நிலவின் தென் துருவத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற பள்ளத்தில் ஒடிசியஸ் தரையிறங்கியது.
இது நிலவின் ஆராயப்படாத மற்றும் ஆபத்தான பகுதியாகும். இந்த பகுதிக்கு சார்லஸ் மலாபெர்ட்டின் என பெயரிடப்பட்டுள்ளது.
இது வானியல் வரலாற்றின் ஒரு முக்கிய நபராக கருதப்படுபவரின் பெயராகும்.
பிப்ரவரி 15 அன்று கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் பால்கன்-9 ராக்கெட்டில் ஒடிஸியஸ் தனது பயணத்தைத் தொடங்கியது.
இது நிலவை நோக்கி, பூமியின் குறுகிய நேரடி பாதையில் செலுத்தபட்டது.
இந்தியாவின் சந்திரயான்-3, பூமியைச் சுற்றி வந்து, நிலவை அடைய வாரங்கள் எடுத்தது போலல்லாமல், அதை வெறும் எட்டு நாட்களில் சந்திரனுக்கு போகக்கூடிய நேரடி பாதையாகும்.
ட்விட்டர் அஞ்சல்
நிலவில் தரையிறங்கிய ஒடிசியஸ்
Today, for the first time in half a century, America has returned to the Moon 🇺🇸.
— Bill Nelson (@SenBillNelson) February 23, 2024
On the eighth day of a quarter-million-mile voyage, @Int_Machines aced the landing of a lifetime.
What a feat for IM, @SpaceX & @NASA.
What a triumph for humanity.
Odysseus has taken the Moon. pic.twitter.com/JwtCQmMS2K
ட்விட்டர் அஞ்சல்
நிலவில் தரையிறங்கிய ஒடிசியஸ்
Your order was delivered… to the Moon! 📦@Int_Machines' uncrewed lunar lander landed at 6:23pm ET (2323 UTC), bringing NASA science to the Moon's surface. These instruments will prepare us for future human exploration of the Moon under #Artemis. pic.twitter.com/sS0poiWxrU
— NASA (@NASA) February 22, 2024