NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்
    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்

    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 06, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் பெங்களூருவில் உள்ள தங்களுடைய உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், புதிய 6G ஆய்வகத்தை அமைத்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

    நோக்கியாவின் இந்தப் புதிய ஆய்வகத்தை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

    2014ம் ஆண்டு தங்களுடைய ஸ்மார்ட்போன் வணிகத்தை விற்பனை செய்த பிறகு, தொலைத்தொடர்பு வலைப்பின்னல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வணிகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது நோக்கியா.

    தற்போது உலகின் முன்னணி வலைப்பின்னல் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது நோக்கியா. மேலும், உலகளவில் மிகவும் மேப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வகங்களையும் வைத்திருக்கிறது நோக்கியா.

    6G

    இந்திய 6G முன்னெடுப்பில் பங்கெடுக்கும் நோக்கியா: 

    இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 5G வலைப்பின்னலை விரிவுபடுத்தத் தொடங்கின, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும்.

    கிட்டத்தட்ட பெரும்பான்மையான பெரு மற்றும் சிறு நகரங்கள் மேற்கூறிய இரு நிறுவனங்களும் 5G தொலைத்தொடர்பு சேவையை விரிவுபடுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் 6G தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அதனை அனைத்து மக்களின் பயன்பாட்டிற்கும் அறிமுக்பபடுத்த 'பாரத் 6G தொலைநோக்கு'த் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது இந்தியா.

    இந்தியாவின் இந்த திட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு தற்போது பெங்களூருவில் புதிய ஆய்வகத்தைத் திறந்திருக்கிறது நோக்கியா.

    இந்த ஆய்வகத்தில் 6G தொழில்நுட்பம் மற்றும் வலைப்பின்னலை சென்சாராப் பயன்படுத்தும் தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை ஆராய்ந்து மேம்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.

    நோக்கியா

    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பு: 

    இந்தியாவின் நோக்கியாவின் புதிய ஆய்வகத் திறப்பினைத் தொடர்ந்து, இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெக்கா லண்ட்மார்க்.

    "இந்தியாவில் 5G சேவையின் பரவலாக்கம் மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. உலகளவில் மிகவும் வேகமாக பரவலாக்கப்பட்ட தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களில் இதுவும் ஒன்று.

    மிகப்பெரிய அளவிலான 5G உட்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளுள் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது இந்தியா. மேலும், உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகளை விட அதிவேக 5G பதிவிறக்க வேகத்தைக் கொண்டிருக்கிறது இந்தியா" என இந்தியாவின் 5G உட்கட்டமைப்பு குறித்து தெரிவித்திருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோக்கியா
    பெங்களூர்
    5G

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நோக்கியா

    ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை தொழில்நுட்பம்
    60 ஆண்டுக்கு பின் லோகோவை மாற்றிய நோக்கியா - காரணம் என்ன? ஸ்மார்ட்போன்
    நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்? ஸ்மார்ட்போன்

    பெங்களூர்

    பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்' இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு இந்தியா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்

    5G

    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் சிறந்த தேடல்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் தொழில்நுட்பம்
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    இந்தியாவில் வந்துவிட்டது ஏர்டெல் மற்றும் ஜியோ-வின் 5ஜி நெட்வொர்க்: விவரங்கள் இதோ தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025