12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி
செய்தி முன்னோட்டம்
கடந்த டிசம்பர் 2022-ல் சீனாவில் புதிய 12C மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது ரெட்மி.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 12C மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அறிமுகமான போது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் ஒன்றும், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டே வேரியன்ட் ஒன்றையும் வெளியிட்டிருந்தது ரெட்மி.
வெளியீட்டிற்குப் பின்பு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதையடுத்து, தற்போது 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இடைப்பட்ட வேரியன்ட் ஒன்றை ரெட்மி வெளியிட்டிருக்கிறது.
புதிய வேரியன்டானது மற்ற இரு வேரியன்ட்களுக்கும் இடைப்பட்ட ரூ.9,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் டாப்-எண்டு 6GB வேரியன்டானது ரூ.10,999-க்கும், அடிப்படை வேரியன்டானது ரூ.8,999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரெட்மி
ரெட்மி 12C: சிறப்பம்சங்கள்
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 1600x720 பிக்சல்கள் மற்றும் 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.71 இன்ச் LCD டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது ரெட்மி. அத்துடன் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட MIUI 13-ஐ இந்த ரெட்மி 12C-யில் கொடுத்திருக்கிறது.
பின்பக்கம் 50MP + 2MP கேமராக்களுடன் டூயல் ரியர் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
5000mAh பேட்டரி கொண்ட 12C-யில், 10W சார்ஜிங் வசதியை அளித்திருக்கிறது ரெட்மி. மேலும், கனெக்டிவிட்டிக்காக 4G, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.
ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் MI தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.