தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள்
இந்தியாவில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இவை பல விஷயங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரமாகும். எனவே, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, 2019 ஆம் ஆண்டில் மட்டுமே 4,67,171 சாலை விபத்துகள் நடந்துள்ளன. முதன் முதலில் 1989 ஆண்டில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வானது அனுசரிக்கப்பட்டது. சாலை விபத்துக்கான காரணங்கள் சாலை விபத்து ஏற்பட அதிக வேகமாக செல்வது. வாகனங்களுக்கு இடையேயான இடைவேளி மற்றும் சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் விபத்து உண்டாகிறது. உடல்நல பிரச்சினைகள் அல்லது சோர்வாக உணரப்பட்டால் வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
சாலை விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
வாகனம் ஓட்டும்போது, வலது புறமாக வரும் வாகனங்களை தடுக்க, இடதுபுறமாக செல்லவேண்டும். வாகனத்தை திருப்பும்போது இதனை முறையாக பின்பற்ற வேண்டும். அடுத்து, எந்த திசையை நோக்கி திரும்பினாலும், வாகனத்தின் இடது அல்லது வலது சிக்னல்களை முறையாக பயன்படுத்த வேண்டும். நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஐஎஸ்ஐ முத்திரையுடைய ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டும். காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சாலையை கடக்கும்பொழுது நண்பர்கள் எதிர்பாராமல் பார்த்தவுடன் நலம் விசாரிக்ககூடாது. நடைபாதைக்கு சென்ற பிறகு உங்களின் நல விசாரிப்புகளை தொடரலாம். வாகனத்தை ஓட்டுகையில் மது அருந்திவிட்டு ஓட்டுவதை தவிர்க்கவும். இதனால் விபத்தை அதிகளவில் தடுக்கலாம்.