Loading...
நிலவில் இறங்கி வாழப்போகும் புதிய மனிதர்கள்; கோடிக் கணக்கில் சம்பளத்துடன் ஆட்தேர்வு செய்கிறது நாசா
கோடிக் கணக்கில் சம்பளத்துடன் நிலவில் தங்கி வாழும் மனிதர்களுக்கான ஆட்தேர்வு செய்கிறது நாசா

நிலவில் இறங்கி வாழப்போகும் புதிய மனிதர்கள்; கோடிக் கணக்கில் சம்பளத்துடன் ஆட்தேர்வு செய்கிறது நாசா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

நிலவில் மீண்டும் மனிதர்களைத் தரையிறக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆர்டெமிஸ்-3 திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. தேர்வாகும் நபர்கள் விண்கலங்களை சோதிப்பது மட்டுமன்றி, நிலவில் உருவாக்கப்படும் பிரத்யேக மையத்தில் தங்கிப் பணியாற்றுவார்கள். நாசாவின் தற்போதைய விண்வெளி வீரர் குழுவில் 32 நபர்கள் மட்டுமே உள்ளனர். இதுவரை நடைபெற்ற பல்வேறு விண்வெளிப் பயணங்களுக்காக மொத்தம் 370 நபர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி

கல்வித் தகுதி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம்

விண்வெளி வீரர் பதவிக்கு விண்ணப்பிக்க அமெரிக்கக் குடியுரிமை கட்டாயமாகும்.

விண்ணப்பதாரர்கள் பொறியியல், கணிதம் அல்லது அறிவியல் சார்ந்த STEM பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதில் புதிய மாற்றமாக, முதுகலை செவிலியர் பட்டப்படிப்பும் தற்போது STEM பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டம் பெற்ற பிறகு குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்டி / விமானி அனுபவம் இருக்க வேண்டும்.

2 ஆண்டுகள் பயிற்சி

கடுமையான தேர்வுகள் மற்றும் 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சிகள்

நாசாவின் விண்வெளி வீரர் தேர்வு முறை மிகவும் கடுமையான போட்டியைக் கொண்டது.

கடந்த முறையில் பெறப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 10 நபர்கள் மட்டுமே இறுதித் தேர்வாகினர்.

தேர்வாகும் புதிய நபர்களுக்கு நிலவின் தென்பகுதியில் தரையிறங்குவது மற்றும் கடினமான விண்வெளி நடைகளை எதிர்கொள்வது குறித்து 2 ஆண்டுகளுக்குத் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் நாசா இணைந்து செயல்படுகிறது.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை

2027-2028 நிலவுத் திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள்

1972 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் இத்திட்டம் 2027 அல்லது 2028-ல் ஏவப்படும் என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்குத் தேர்வாகும் வீரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக $164,395 (இந்திய மதிப்பில் சுமார் 1.50 கோடிக்கும் மேல்) வழங்கப்படவுள்ளது.

தகுதியுடைய நபர்கள் வரும் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதித் தேர்வுப் பட்டியல் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT