NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா
    அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா

    அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 09, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் அக்டோபர் 12ம் தேதியன்று தங்களுடைய புதிய விண்வெளித் திட்டமான சைக் திட்டத்தை (Psyche Mission) செயல்படுத்தத் தயாராகி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

    சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுவட்டப்பாதைகளுக்கு இடையே அமைந்திருக்கிறது பல்லாயிரம் சிறுகோள்களை உள்ளடக்கிய ஆஸ்டிராய்டு பெல்ட் (Asteroid Belt).

    இந்த ஆஸ்ட்ராய்டு பெல்டில் அமைந்திருக்கும் 16 சைக் என்ற சிறுகோளை ஆய்வு செய்வதற்காகவே இந்த சைக் திட்டத்தை செயல்படுத்துகிறது நாசா.

    சைக் 16 சிறுகோளானது இரும்பு, நிக்கல் மற்றும் பல்வேறு உலோகங்களான ஆன சிறுகோளாகா உருவாகியிருக்கிறது. இந்த சிறுகோளானது 10,000 குவாட்ரில்லியன் டாலர்களாக அளவிற்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது.

    நாசா

    ஏன் சைக் 16 சிறுகோளை ஆய்வு செய்ய திட்டமிடுகிறது நாசா? 

    சூரிய குடும்பத்தில் உள்ள மெர்குரி, வீனஸ் மற்றும் பூமி ஆகிய கோள்களின் உட்பகுதிகளானது பல்வேறு உலோகங்களால் ஆகியிருக்கிறது. கிட்டத்தட்ட நமது கோளின் நடுப்பகுதி போன்ற ஒரு கட்டமைப்பையே கொண்டிருக்கிறது சைக் 16.

    எனவே, இந்தக் கோளை ஆய்வு செய்வதன் மூலம் கோள்களின் உருவாக்கம் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

    280கிமீ அகலம் மற்றும் 232கிமீ நீளமுடைய இந்த சைக் 16 சிறுகோளை ஆய்வு செய்வதற்கான ஆய்வுக்கலனை, வரும் அக்டோபர் 12ம் தேதியன்று ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது நாசா.

    அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த ஏவலை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது நாசா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    விண்வெளி

    சமீபத்திய

    விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது! நடிகர் விஜய்
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! உலகம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் தொழில்நுட்பம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி

    விண்வெளி

    சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல் சந்திரயான் 3
    லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ சந்திரயான் 3
    இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3 சந்திரயான் 3
    ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா? ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025