Page Loader
போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி
போக்குவரத்தில் ஒழுங்கீனமாக செயல்படும் நகரம் டெல்லி தான்

போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி

எழுதியவர் Siranjeevi
Feb 22, 2023
05:44 pm

செய்தி முன்னோட்டம்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி போக்குவரத்து மீறலை உதாரணம் காட்டி மிகவும் ஒழுங்கீனமான நகரம் என்றால் அது டெல்லிதான் என்று கூறியிருக்கிறார். ஒழுக்கம் இல்லாத நகரம் டெல்லி எனவும், தலைநகரில் டெல்லியில் போக்குவரத்து விதிமீறலை எடுத்துக்காட்டாகக் கூறி, டெல்லி மிகவும் ஒழுங்கீனமான நகரம் என்றும் அதனால் தான் டெல்லிக்கு வருவதை சங்கடமாக உணர்கிறேன் என்றும் கூறி நாராயண மூர்த்தி இருக்கிறார். இவர், அனைத்திந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நாராயண மூர்த்தி இவ்வாறு பேசி இருக்கிறார். மேலும், நம் குழந்தைகளுக்குக் இதை கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச் சின்ன இடங்களிலும் சரியான பாதையில் செல்வதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் படிப்படியாக விதிகறை மீறாமல் இருக்கும் பண்பு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Instagram அஞ்சல்

போக்குவரத்தில் ஒழுங்கினம் டெல்லி - இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி