Page Loader
ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்!
ஐடி ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு வகுப்புகளை நடத்தவுள்ளனர்.

ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்!

எழுதியவர் Siranjeevi
Feb 17, 2023
01:54 pm

செய்தி முன்னோட்டம்

ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு AI தொடர்பான பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளது. உலகமுழுவதும் பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு செயல்திட்டங்கள் வளர்ந்துள்ளது. இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல துறைகளில் வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர். இதனை பல நிறுவனங்கள் AI கையில் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் இரண்டு முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ், ஆக்சென்ச்சர் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப ஆலோசகர்களுடன் இணைந்து, ChatGPT மற்றும் இதேபோன்ற AI தொழில்நுட்பங்களை ஆரம்ப நிலையாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் கொண்ட வகுப்புகளை வழங்க உள்ளன.

AI தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தை கையில் எடுத்த ஐடி நிறுவனம் - ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு

ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI மாதிரிகள் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமைக்கான அணுகலையும் சீர்குலைக்கலாம் என்ற அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TCS மற்றும் Infosys ஆகியவை AI- கருப்பொருள் சார்ந்த படிப்புகளை தங்கள் ஊழியர்களுக்கு தொழில்நுட்பத்தை நன்கு அறிந்துகொள்ளவும், அத்தகைய AI பயன்படுத்தப்படும் செயல்பாடுகளைக் கையாளும் திறன்களைப் பெறவும் பயிற்சி அளிக்கவுள்ளது. மேலும், அக்சென்ச்சர் தனது கற்றல் தளத்தில் இதே போன்ற படிப்புகளைச் சேர்க்கும் பணியில் உள்ளது. இருந்தாலும், செயலாக்கத்தில் உள்ள பலவீனம், பதில்களைப் பெறுவதில் தாமதம் போன்றவற்றால் AI மாதிரிகளின் வரம்புகள் பற்றிய கவலைகளும் உள்ளன.