இவையெல்லாம் உண்மையா பொய்யா: டெக் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்த bing
சமீபத்தில் தான் Bing என்ற சேர்ச் என்ஜினுடன், மைக்ரோசாப்ட் முதலீடு செய்த, OpenAi நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான chatgpt இணைக்கப்பட்டு, யூசர்களுக்கு அறிமுகம் ஆனது. இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வளவு ஸ்மார்ட்டாக இயங்குகிறது, தேடல் முடிவுகளைத் தருகிறது என்பதை சோதிக்கும் முயற்சியாக, டெக் உலகில் பொதுவாக வலம் வரும் தகவல்கள் உண்மையா அல்லது கட்டுகதைகளா என்று கேட்கப்பட்டது. அதற்கு chatgpt இணைக்கப்பட்ட bing தேடுபொறி அளித்த பதில்கள் இங்கே. மொபைல்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் கெட்டதா? ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதால், பேட்டரிக்கு பாதிப்பு வராது. எந்த சார்ஜர்களாக இருந்தாலும், பேட்டரி ஓவர்லோடு ஆகாது. ஆனால், அதில் உருவாக்கப்படும் வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மொபைல் பேட்டரியின் ஆயுள் குறையும்.
மொபைல் பற்றிய கேள்விகளுக்கு விடையளித்த chatgpt bing தேடல்
ஸ்மார்ட்போன்கள் டாய்லெட் சீட்டை விட அழுக்கானதா? அரிசோனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கழிவறை இருக்கையை விட ஸ்மார்ட்ஃபோனில் 10 மடங்கு அதிக பாக்டீரியா உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில பாக்டீரியாக்கள் மிக ஆபத்தானவையாக இருக்கலாம். மொபைலில் மென்பொருள் அப்டேட் செய்தால், வேகம் குறையுமா? இது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனைப் பொறுத்தது. ஒரு சில ஸ்மார்ட்ஃபோன்களில் பெரிய அளவிலான ஃபைல்கள் அப்டேட் ஆகும் பொழுது, அதற்கான ஸ்டோரேஜ் போதாமல் இருந்தால் ஃபோனின் வேகம் குறையும். ஆண்டிராய்டு அல்லது ios எது சிறந்தது என்ற கேள்விக்கு, தெளிவான இரண்டு தரப்பின் சாதக பாதகங்களையும் பட்டியிலிட்டு பதில் கூறியுள்ளது. கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் முழுத்தொகுப்பின் இணைப்பு இங்கே.