
இந்தியாவில் வெளியானது 'மோட்டோரோலா எட்ஜ் 40'.. வசதிகள் மற்றும் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்த மாதத் துவக்கத்தில் ஐரோப்பாவில் வெளியிட்ட 'எட்ஜ் 40' ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா.
ரூ.30,000-க்குள்ளான ஸ்மார்ட்போன் செக்மண்டில் சாம்சங் கேலக்ஸி S20 FE மற்றும் ஐகூ நியோ 7 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக இந்த மாடலை வெளியிட்டிருக்கிறது மோட்டோ.
144Hz ரெப்ரஷ் ரேட், 360Hz டச் சேம்ப்ளிங், 1200 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் மற்றும் HDR10+ சான்றிதழ் கொண்ட 6.55 இன்ச் pOLED டிஸ்பிளேவை இந்த எட்ஜ் 40-யில் பயன்படுத்தியிருக்கிறது மோட்டோ.
பின்பக்கம் 50MP முதன்மைக் கேமராவையும், 13MP அல்ட்ரா-வைடு கேமாரவையும் கொண்டிருக்கும் இந்த எட்ஜ் 40, முன்பக்கம் செல்ஃபிக்காக 32MP கேமராவைக் கொண்டிருக்கிறது.
ஸ்லிம்மான பெஸெல்கள், IP68 ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கிறது.
மோட்டோ
ப்ராசஸர், வசதிகள் மற்றும் விலை:
மீடியாடெக் டைமன்சிட்டி 8020 ப்ராசஸரை இந்த எட்ஜ் 40-யில் பயன்படுத்தியிருக்கிறது மோட்டோ. 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டே ஒரேயொரு வேரியன்ட் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,400mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கனெக்டிவிட்டிக்காக 5G, வை-பை 6, ப்ளூடூத் 5.2, GPS, NFC மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.
இதன் ஒரே 8GB/256GB வேரியன்ட்டை ரூ.27,999 விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ம் தேதி முதல் இந்த மொபைலின் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.