எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!
பெரிய நிறுவனங்கள் எல்லாம் ப்ரீமியம் மற்றும் மிட்-ரேஞ்சு செக்மண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, பெரிய புதுவரவுகள் இன்றி இருந்த தொடக்கநிலை செக்மண்டில் தங்களது மோட்டோ E13 இந்த ஆண்டு வெளியிட்டது மோட்டோரோலா. வசதிகள்: 6.5 இன்ச் LCD டிஸ்பிளே Unisoc T606 ப்ராசஸர் 13 MP ரியர் கேமரா: 5 MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி 10W சார்ஜிங் வசதி: டைப் சி போர்ட் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) விலை: 2 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.6,999 4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.7,999
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்தே இந்த புதிய தொடக்கநிலை ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது மோட்டோ. பெர்ஃபாமன்ஸ் முதல் கேமரா வரை எல்லாமே சிறப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது. ஆனால், இந்த விலைக்கு மோட்டோ கொடுத்திருக்கும் வசதிகளும் பெர்ஃபாமன்ஸும் நன்றாகவே இருக்கிறது. இந்த விலைக்கு டைப் சி போர்ட், டூயல் பேண்டு வை-பை ஆகியவை ப்ளஸ். இதே ப்ராசஸர் கொண்ட போட்டியாளர்களின் மொபைல் போன்கள் இதைவிட கூடுதல் விலையில் தான் கிடைக்கின்றன என்னும் போது, இந்த விலையில் இதன் வசதிகள் சூப்பர். மோட்டோவில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் அதன் சுத்தமான பயனர் அனுபவம் தான். தேவையில்லாத ப்ரீலோடட் செயலிகள் இல்லாமல் இருக்கும். இந்த மொபைலிலும் அதனை பின்பற்ற முயற்சி செய்திருக்கிறது மோட்டோ.