ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! மெட்டா நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை
ஆயிரக்கணக்கான பணியாளர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வேலைக்கு சேர உள்ளவர்களின் பணி நியமனத்தையும் ரத்து செய்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதுவரை இல்லாத அளவில் சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில், புதிதாக பணி சேர விரும்புவர்களின் பணி நியமனத்தையும் திரும்ப பெறுவதாக கூறப்படுகிறது.
Gergely Orosz meta withdrawing full-time job
ஊழியர்களின் பணி நியமனம் திரும்ப பெறப்படுகிறது
இது தொடர்பாக தொழில்நுட்ப நிருபர் ஜெர்ஜிலி (Gergely Orosz) ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், "லண்டனில் முழு நேர வேலைவாய்ப்புகளை ரத்து செய்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், புதிய பட்டதாரிகள் பிப்ரவரி மாதம் சேர இருந்த நிலையில், அவர்களது பணி நியமனம் திரும்ப பெறப்பட்டதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 20 பணியாளர்களை எனக்கு தெரியும். எனவே, FTE சலுகைகளை Meta திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்" எனவும் தெரிவித்துள்ளார்.