CES 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சில வித்தியாசமான மற்றும் அசத்தல் தொழில்நுட்பங்கள்
CES 2023 இல், பல வினோதமான தொழில்நுட்ப படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் சிலவற்றை பற்றி ஒரு முன்னோட்டம் இதோ: தன்னிச்சையாக இயங்கும் பிராம்: 'எல்லா' என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தைகள் பிராம், தன்னிச்சையாக செயல்படும் வண்ணம் வடிவமைத்து உள்ளனர். டிஸ்பிளே கட்டிங் போர்டு: BLOK எனும் நிறுவனம் இந்த போர்டு-ஐ உருவாக்கி உள்ளது. மரத்தினால் ஆன இந்த கட்டிங்போர்டு, காய்களை வெட்டிக்கொண்டே, தேவைக்கேற்ப சமையல் வகுப்புகளைக் காண உதவுகிறது. இதற்காக, உள்கட்டமைக்கப்பட்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. கழிவறை சென்சார்: 'யூ-ஸ்கேன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வினோதமான சென்சார், கழிப்பறை கமோடில் இணைக்கப்பட வேண்டும். உங்கள் கழிவறை பயன்பாட்டை பகுத்தாய்ந்து, சில சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் முடிவுகளை, உங்களது மொபைலிற்கு அனுப்பி வைக்கும்.
டிஸ்பிளே இல்லாத கடிகாரம்
டிஸ்பிளேயற்ற கடிகாரம்: பாரம்பரிய ஸ்மார்ட்வாட்ச் திரைகளில் வரும் தொடர்ச்சியான அறிவிப்புகள் உங்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம். இந்த NOWATCH ஆனது, டிஸ்பிளே திரை இல்லாமல், ஆரோக்கியத்தை மட்டும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது உங்கள் வியர்வை சுரப்பியின் செயல்பாடு மற்றும் மன அழுத்த நிலைகளை ஆய்வு செய்ய Philips EDA பயோசென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. செல்ல நாய்கான மெஸ்சஞ்சேர் சேவை: FluentPet இன் புதிய ஆப் மூலம், உங்கள் செல்ல பிராணிகள் உங்களுடன் உரையாடலாம். அந்த ஆப்பில் உங்கள் நாய்க்கு தேவைப்படும் சில வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றை அழுத்தி, உங்கள் செல்ல பிராணிகள் உங்களிடம் அதன் தேவைகளை உணர்த்த முடியும். இதேபோல பல வித்தியாசமான கேட்ஜெட்கள் இந்த CES 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.