இந்தியாவில் வெளியானது 'லாவா அக்னி 2' ஸ்மார்ட்போன்.. விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5G ஸ்மார்ட்போனான 'அக்னி 2' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா.
செக்மண்டிலேயே முதல் முறையாக சில வசதிகளையும் இந்த அக்னி 2-வில் அளித்திருக்கிறது லாவா. என்னென்ன சிறப்பம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது இந்த அக்னி 2?
நடுவில் பன்ச்-ஹோல் செல்ஃபி கேமார, மெல்லி பெசல்களுடன் 6.78 AMOLED கர்வ்டு டிஸ்பிளேவைவை அக்னி 2-வில் வழங்கியிருக்கிறது லாவா.
93.65% ஸ்கீரன்-டூ-பாடி ரேஷியோவுடன், 120Hz ரெப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னைஸ் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகியவையும் இந்த அக்னி 2-வில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பின்பக்கம் 50MP முதன்மைக் கேமராவுடன், மூன்று கூடுதல் கேமரா சென்சார்களையும், முன்பக்கம் 16MP செல்ஃபி கேமராவையும் வழங்கியிருக்கிறது லாவா.
லாவா
ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்:
இந்த அக்னி 2-வில் டைமன்சிட்டி 7050 ப்ராசஸரை வழங்கியிருக்கிறது லாவா. மேலும் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரேயொரு வேரியண்ட் மட்டுமே வெளியாகியிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த அக்னி 2-வில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
டூயல் சிம் சப்போர்ட், 13 5G பேண்டுகள், வை-பை, ப்ளூடூத் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை இந்த அக்னி 2-வில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அக்னி 2-வின் ஒரேயொரு 8GB/256GB வேரியன்டை ரூ.21,999 விலையில் வெளியிட்டிருக்கிறது லாவா. அமேசான் தளத்தில் மே 24 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.
எந்த வங்கியின் மூலம் பரிவர்த்தனை செய்தாலும் ரூ.2,000-த்தை உடனடி சலுகையாகப் பெறமுடியும்.