Page Loader
50 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்! ஜியோவின் அசத்தலான வெல்கம் ஆஃபர்
ஜியோ 5ஜி சேவை மேலும் 50 நகரங்களில் தொடக்கம்

50 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்! ஜியோவின் அசத்தலான வெல்கம் ஆஃபர்

எழுதியவர் Siranjeevi
Jan 25, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

எப்போது 5ஜி சேவை வரும் என காத்திருந்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, கடந்த நாட்களுக்கு முன் இந்தியாவில் 5ஜி சேவைகளை செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் 16 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது தருமபுரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி உட்பட மேலும் 50 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம், 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் இதுவரை Jio True 5G சேவைகளை பெற்றுள்ளனர். இதுகுறித்து, ஜியோ நிறுவனம் '5G சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில், கூடுதல் கட்டணமின்றி, இன்று முதல் வழங்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளது.

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி சேவை மேலும் 50 நகரங்களில் தொடக்கம் - கூடுதலாக வெல்கம் ஆஃபர்

மேலும், இந்த 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஜியோ பயனர்களுக்கும் 5ஜி சேவையை வழங்க உள்ளதாக கூறியுள்ளனர். இந்த 5ஜி சேவையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க அடிக்கடி நினைவூட்டல் மெசேஜ், மற்றும் கால் அழைப்பின் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் ஜியோ நிறுவனம்.