Page Loader
16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்!
ஜியோ 5ஜி சேவை இன்று முதல் 16 நகரங்களில் தொடக்கம்

16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்!

எழுதியவர் Siranjeevi
Jan 18, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கானா உட்பட 7 மாநிலங்களிலும், 16 நகரங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தோடு, 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவின் அதிவேக சேவையை வழங்கும் ஜியோ நிறுவனம் இன்று ஜனவரி 17 ஆம் தேதி 16 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார் நகரத்தில், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக் பேத்தகிரி ஆகிய நகரங்களிலும், கேரளாவில் கன்னூர், கொட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலுங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஜியோ

ஜியோ வெல்கம் ஆஃபர் பெற என்ன செய்யவேண்டும்?

இதுமட்டுமின்றி, இந்த நகரங்களுக்கு ஜியோ நிறுவனம் Jio's Welcome Offer ஆக வாடிக்கையாளர்கள் 1Gbps வேகத்தில் அளவற்ற இணையச் சேவையை அனுப்பவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, Jio's Welcome Offer வாடிக்கையாளர்களுக்கு இணைப்பும் அனுப்பபடும். அதன் மூலம் ரூ.239 திட்டம் அல்லது அதற்கு மேல் ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வேகத்தில் 5ஜி சேவையை எந்தவிதமான கட்டணமின்றி வழங்கப்படும். இதுகுறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ஜியோ 5ஜி சேவை வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த மாநிலங்களுக்கு நன்றி. மேலும், 700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனம் ஜியோ என தெரிவித்துள்ளார்.