Page Loader
45,000 நட்சத்திர மண்டலங்கள், ஒரே புகைப்படத்தில்.. ஜேம்ப்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை!
45,000 நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய ஜேம்ஸ் வெப் படம்பிடித்த புதிய புகைப்படம்

45,000 நட்சத்திர மண்டலங்கள், ஒரே புகைப்படத்தில்.. ஜேம்ப்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 07, 2023
03:02 pm

செய்தி முன்னோட்டம்

14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த பெருவெடிப்பைத் தொடர்ந்தே இந்த பேரண்டமும் விண்வெளியும் உருவாகியது என நாம் படித்திருப்போம். தொடக்க காலத்தில் உருவாகிய நட்சத்திரங்கள், விண்மீண் மண்டலங்களை நாம் இதுவரை பார்த்திருக்கும் (விஞ்ஞானிகள் பார்த்திருக்கும்) வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், தற்போதும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் பேரண்டம் உருவாகி 600 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளேயே உருவான கேலக்ஸிக்களை படம்பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அகச்சிவப்பு ஒளியின் அலைநீளத்தையும் படம்பிடிக்கும் திறனுடயன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியிருப்பதாக அதனை விண்ணில் செலுத்திய போது விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்தத் திறனால், இதுவரை நாம் பார்த்திராத தொடக்ககாலத்தில் உருவான விண்மீண் மண்டலங்களையும் நம்மால் தற்போது பார்க்க முடியும் என அப்போதே விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

விண்வெளி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை: 

ஃபார்நாக்ஸ் விண்மீன் கூட்டம் இருக்கக்கூடிய திசையில் GOOD-S என்ற பகுதியை தற்போது படம்பிடித்திருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அந்தப் புகைப்படத்தில் கிட்டத்தட்ட 45,000 நட்சத்திர மண்டலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அத்தனையையும் ஒரே புகைப்படத்தில் நமக்குக் கொடுத்திருக்கிறது ஜேம்ஸ் வெப். முதன் முதலில் நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் தோன்றியது இந்தப் பகுதியில் தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். முதன் முதலாக நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்த அந்த காலகட்டத்தை 'Epoch of Reionization' எனக் குறிப்பிடுகின்றனர். இந்தப் புதிய புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பேரண்டம் உருவாகி 600 மில்லியன் ஆண்டுகளிலேயே உருவானவையாம். இந்த நட்சத்திர மண்டலங்கள் இப்போதும் புதிய நட்சத்திரங்களை உருவாக்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.