இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது
சாட்ஜிபிடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த நிலையில், இத்தாலி அரசானது கடந்த நாட்களுக்கு முன்பு ChatGPT-யை தடை செய்து இருந்தது. இதுபற்றி அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில் பயனர்களின் தரவுகளை மதிப்பது இல்லை. பயனர்களின் வயதையும் சரிபார்ப்பது கிடையாது என தெரிவித்து இருந்தது. இதனிடையே, தடைசெய்யப்பட்ட சாட்ஜிபிடி தற்காலிக தடைதான் என்றும் இதனை இத்தாலியின் டேட்டா பாதுகாப்பு ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், OpenAI மீது இத்தாலி அரசு பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்த காரணத்திற்காக இந்த தடையை இத்தாலி அறிவித்தது.
சாட்ஜிபிடி இத்தாலி தடையை தொடர்ந்து பிற நாடுகளும் தடைக்கு முயற்சி
இந்த குற்றத்திற்கு, OpenAI இதற்கு விளக்கம் கேட்டது. OpenAI தற்போதைக்கு இத்தாலியில் பயனர்கள் பயன்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, OpenAI இன் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சாட்போட், ChatGPT, மேலும் சிக்கலில் இருக்கக்கூடும் என தரவுப் பாதுகாப்பிற்கான ஜெர்மன் ஆணையர் Handelsblatt தெரிவித்துள்ளார். தரவு பாதுகாப்பு கவலைகள் காரணமாக AI சாட்போட், ChatGPT-ஐத் தடுப்பதை ஜெர்மனி பரிசீலிக்கலாம். இது மாநில அதிகார வரம்பிற்குள் வரும். மேலும் இதுகுறித்து ஜெர்மனி, இத்தாலியிடம் கூடுதல் தகவல்களை கோரியுள்ளதாக ஜெர்மன் ஆணையர் தெரிவித்துள்ளார்.