
தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது!
செய்தி முன்னோட்டம்
கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக தேவை இருந்தது. எனவே, அப்போது புதிதாக பணியில் இணைந்த ஊழியர்களுக்கும், வேறு நிறுவனங்களில் இருந்து பணிமாறும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட வந்தது.
ஆனால், இனியும் அதே நிலை தொடராது எனத் தெரிவித்திருக்கிறார் விப்ரோ நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி சவுரப் கோவில்.
"அதீத சம்பள உயர்வுடன் இனி விப்ரோ நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தாது. மிகவும் திறன் மிகுந்த ஊழியர்கள் மட்டுமே அதீத சம்பள உயர்வுடன் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கொரோனா காலத்தில் தொழில்நுட்பதுறை வளர்ச்சியில் இருந்தது, முதலீடுகள் தாராளமாக இருந்தன, வட்டி வகிதமும் குறைவாக இருந்தது, ஆனால் தற்போதைய நிலைமை அப்படி இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார் சவுரப் கோவில்.
விப்ரோ
அடிப்படைப் பணிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்:
தங்கள் நிறுவனத்தில் மனித வளத்துறையைத் சேர்ந்த பணியாளர்கள் மேற்கொள்ளும் 80% பணிகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆட்டோமேட் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அந்தத் துறையில் பணிபுரியும் குறைந்த அளவு ஊழியர்களும் அந்த AI தொழில்நுட்பகளைப் பயிற்சியளிக்கவும், மேற்பார்வையிடவுமே பயன்படுத்தப்படுவிருக்கிறார்கள்.
மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல விப்ரோ நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அந்த அறிவிப்பு இன்னும் கட்டாமயாக்கப்படவில்லை.
விப்ரோ நிறுவனம், சமீபத்தில் 92% புதிய பணியாளர்கள் ஆண்டிற்கு ரூ.3.5 லட்சம் என்ற குறைவான சம்பளத்தில் பணியில் அமர்த்தியிருக்கிறது. மேற்கூறிய ஊழியர்களுக்கு முன்னர் ஆண்டிற்கு ரூ.6.5 லட்சம் சம்பளம் அளிப்பதாக அந்நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.