NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம்; மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம்; மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா
    மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா

    முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம்; மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2024
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 டிசம்பரில் மின்சார உந்துதலுடன் கூடிய முதல் செயற்கைக்கோளான டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் சாட்டிலைட் (டிடிஎஸ்-01) மூலம் விண்ணில் ஏவ உள்ளது.

    இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் இதுகுறித்து கூறுகையில், செயற்கைக்கோளை ஏவுவதற்கு தேவையான ஆற்றல் மற்றும் எரிபொருளைக் குறைத்து, மேம்பட்ட உந்துவிசை தொழில்நுட்பத்தை இது வெளிப்படுத்தும் என்றார்.

    அதாவது, செயற்கைக்கோளின் செயல்திறனை பராமரிக்கும் அதேவேளையில், ஒட்டுமொத்த எடை மற்றும் எரிபொருள் தேவைகள் இதன் மூலம் குறையும்.

    இஸ்ரோவின் திருப்புமுனையான எலக்ட்ரிக் ப்ரொபல்ஷன் த்ரஸ்டர்கள், பாரம்பரிய அமைப்புகளை விட கணிசமாக குறைந்த எரிபொருளைப் பயன்படுத்துகின்றன.

    எலக்ட்ரிக் ப்ரொபல்ஷன்

    எலக்ட்ரிக் ப்ரொபல்ஷன் த்ரஸ்டரின் சிறப்புகள்

    இரண்டு டன் திரவ எரிபொருள் தேவைப்படும் வழக்கமான நான்கு டன் தொடர்பு செயற்கைக்கோள் போலல்லாமல், டிடிஎஸ்-01 க்கு அதன் மின்சார உந்துவிசை அமைப்புடன் 200 கிலோ மட்டுமே தேவைப்படும்.

    இது குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருக்கும். இந்த அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆர்கான் போன்ற உந்துசக்தி வாயுக்களை அயனியாக்கம் செய்வதன் மூலம் செயல்படுகிறது,

    ஆனால் மெதுவாகவே, சுற்றுப்பாதையை அடையும். எரிபொருள் உந்துதல் புவிநிலை சுற்றுப்பாதையை அடைய ஒரு வாரம் எடுக்கும் போது, ​​மின்சார உந்துதலுக்கு மூன்று மாதங்கள் வரை தேவைப்படலாம்.

    டிடிஎஸ்-01 ஆனது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயண அலை குழாய் பெருக்கிகளையும் (TWTAs) கொண்டிருக்கும். இது தகவல் தொடர்பு மற்றும் தொலை உணர்தலுக்கு முக்கியமானது.

    தொழில்நுட்பம்

    இந்தியாவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத் திறன்

    உள்நாட்டு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன் கடந்த 7 ஆண்டுகளில் மிகவும் மேம்பட்டுள்ளது.

    இஸ்ரோ முன்பு 2017இல் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய பாகங்களைப் பயன்படுத்தி ஜிசாட்-9 தெற்காசிய செயற்கைக்கோளில் மின்சார உந்துவிசையை சோதித்தது.

    இப்போது, டிடிஎஸ்-01 இல் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

    கூடுதலாக, பிப்ரவரி 2025 இல் அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து இந்தியாவால் ஏவப்பட உள்ள செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் திட்டத்திற்கான பணிகளும் வேகமாக முன்னேறி வருகிறது.

    நாசா சமீபத்தில் இதற்கான ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பாளரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    செயற்கைகோள்
    இந்தியா
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா இந்தியா
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம் ஆதித்யா L1
    சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1 இந்தியா
    சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்  இந்தியா

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ

    இந்தியா

    இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது இந்தியா-சீனா மோதல்
    உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி கின்னஸ் சாதனை
    செயற்கை நுண்ணறிவின் தாக்கம்; 60 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஃபோன்பே ஆட்குறைப்பு
    சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா-சீனா மோதல்

    தொழில்நுட்பம்

    கணவர்களை சோம்பேறி, முட்டாள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய ஃபிளிப்கார்ட் மன்னிப்பு கோரியது இந்தியா
    கூகுள் மீட் சேவையை இந்த பிளாட்ஃபார்ம்களில் நிறுத்த கூகுள் நிறுவனம் திட்டம் கூகுள்
    6ஜி தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கும்; அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு தொழில்நுட்பம்
    இனி டைப் பண்ணவே தேவையில்லை; ஜிமெயில் பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்டைக் கொடுத்த கூகுள் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025