புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள் SSLV-D3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட நிலையில், இந்த ராக்கெட் தனது அதன் மூன்றாவது மற்றும் இறுதி வளர்ச்சிப் பயணத்தை நிறைவுசெய்தது. ஒரு வருட பணிக்காக வடிவமைக்கப்பட்ட EOS-08 செயற்கைக்கோள் மைக்ரோசாட்/ஐஎம்எஸ்-1 பஸ்ஸில் கட்டப்பட்டது மற்றும் மூன்று பேலோடுகளை சுமந்து செல்கிறது. எலக்ட்ரோ-ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகிய இந்த பேலோடுகள் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ அறிவிப்பு
SSLV-D3 : இஸ்ரோவின் மைல்கல் திட்டம்
500 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 34 மீட்டர் உயர ராக்கெட் SSLVயின் இறுதிக்கட்ட சோதனை பயணம் இதுவாகும். SSLV-D3-EOS-08 பணியானது இஸ்ரோவின் மிகச்சிறிய ராக்கெட்டின் வளர்ச்சிக் கட்டத்தை நிறைவு செய்வது மட்டுமல்லாமல், எஸ்எஸ்எல்விகளைப் பயன்படுத்தி எதிர்கால வணிக ஏவுதல்களை மேற்கொள்ள இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் திறன்களையும் மேம்படுத்தும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பல பயன்பாடுகளுக்கு மேம்பட்ட சிறிய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரோவின் திறனை இந்த திட்டத்தின் வெற்றி மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.