
ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.
ஆதித்யா L1-ல் உள்ள Aditya Solar wind Particle Experiment (ASPEX) கருவியானது இரண்டு அறிவியல் உபகரணங்களைக் கொண்டுள்ளது.
SupraThermal and Energetic Particle Spectrometer (STEPS) மற்றும் Solar wind Ion Spectrometer (SWIS) ஆகிய இரண்டு உபகரணங்களில், STEPS அறிவியல் உபகரணத்தின் இயக்கமானது செப்டம்பர் 10ம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது.
தற்போது மற்றொரு அறிவியல் உபகரணமான SWIS-ன் இயக்கத்தை கடந்த நவம்பர் 2ம் தேதி தொடங்கியிருக்கிறது இஸ்ரோ. அந்த உபகரணத்தின் வெற்றிகரமாக இயக்கம் குறித்த பதிவினை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு.
ஆதித்யா L1
ஆதித்யா L1ன் SWIS அறிவியல் உபகரணம்:
இரண்டு 360-டிகிரி ஃபீல்டு ஆஃப் வ்யூ சென்சார்களைக் கொண்டிருக்கும் SWIS உபகரணமானது சூரிய காற்றில் உள்ள அயனிகளை அளவிடுவதற்காக ஆதித்யா L1-ல் பொருத்தப்பட்டிருக்கிறது.
முக்கியமாக சூரிய காற்றில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்ஃபா துகள்களை அளவிடுவதற்காக SWIS உபகரணம் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய காற்றில் உள்ள இந்த இரு துகள்களை அளவிடுவதன் மூலம் அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிவதோடு, பூமியில் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.
முக்கியமாக பூமியில் சூரிய காந்தப் புயலை ஏற்படுத்தக்கூடிய கொரோனல் மாஸ் எஜெக்ஷன் குறித்த தகவல்களை இந்த SWIS இயக்கத்தின் அளவீடுகளைக் மறைமுகமாக நமக்கு உணர்த்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரோவின் எக்ஸ் பதிவு:
Aditya-L1 Mission:
— ISRO (@isro) December 2, 2023
The Solar Wind Ion Spectrometer (SWIS), the second instrument in the Aditya Solar wind Particle Experiment (ASPEX) payload is operational.
The histogram illustrates the energy variations in proton and alpha particle counts captured by SWIS over 2-days.… pic.twitter.com/I5BRBgeYY5