மாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 தேசிய விண்வெளி தினத்தின் ஒரு பகுதியாக பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது. புவி-இடஞ்சார்ந்த பயன்பாடுகளில் 12 ப்ரோப்ளம் ஸ்டேட்மெண்டுகள் கொண்ட ஹேக்கத்தான், இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி திட்டங்களில் இருந்து மூன்று அல்லது நான்கு இந்திய மாணவர்களைக் கொண்ட குழுக்களை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்வானது பிரத்யேக இணைய போர்டல் மூலம் நிர்வகிக்கப்படும், மேலும் கடுமையான இரண்டு-நிலை ஸ்க்ரீனிங் செயல்முறையை உள்ளடக்கியது. இஸ்ரோ, இந்த ஹேக்கத்தானின் ஸ்கிரீனிங் செயல்முறையை, "ஆரம்பத்தில், 100 குழுக்கள் அவர்களின் யோசனை மற்றும் ப்ரோப்ளம் ஸ்டேட்மெண்ட்ஸ்-களுக்குப் பொருத்தமான பதில் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். இவற்றில் இருந்து, ஒரு நிபுணர் குழு இறுதிப் போட்டிக்கு 30 அணிகளைத் தேர்ந்தெடுக்கும்." எனகூறியது.
முக்கிய தேதிகள் மற்றும் சமர்ப்பிக்கும் படிகள்
ஜூலை 26, 2024 வரை குழுக்கள் தங்கள் முன்மொழிவுகளை ஹேக்கத்தான்-க்காக தரப்பட்டுள்ள சமர்ப்பிக்கக்கூடிய பிரத்யேக இணைய போர்டல் மூலம் தங்கள் ப்ரோபோசல்களை சமர்ப்பிக்கலாம். இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளின் பட்டியல் ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிக்கப்படும். 30 மணிநேர மாரத்தான் நிகழ்வான இந்த மாபெரும் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் உள்ள NRSC அவுட்ரீச் ஃபெசிலிட்டியில் ஆகஸ்ட் 13, 2024 அன்று காலை 10:00 மணிக்கு IST காலை 10:00 மணிக்குத் தொடங்க உள்ளது.