விண்வெளியில் 'பெட்ரோல் பங்க்'! இஸ்ரோவின் PSLV-C62 வரலாற்றுப் பயணம் இன்று தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), தனது நம்பிக்கைக்குரிய பி.எஸ்.எல்.வி - சி62 ஏவுகணையை இன்று காலை 10:17 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இந்தத் திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'அன்வேஷா' (EOS-N1) முதன்மைப் பயணியாகச் செல்கிறது. இது மண்ணின் ஈரப்பதம் மற்றும் தாதுப் படிவுகளைத் துல்லியமாகக் கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது. நேபாளம், பிரேசில், ஸ்பெயின் மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்லும் இந்த மிஷன், இந்தியாவின் வணிக விண்வெளிச் சந்தையின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, நேபாள பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'முனால்' செயற்கைக்கோளும் இதில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Liftoff!
— ISRO (@isro) January 12, 2026
PSLV-C62 launches the EOS-N1 Mission from SDSC-SHAR, Sriharikota.
Livestream link: https://t.co/fMiIFTUGpf
For more information Visit:https://t.co/3ijojDaYB2
#PSLVC62 #EOSN1 #ISRO #NSIL
AayulSAT
விண்வெளியில் பெட்ரோல் பங்க்
இந்த விண்வெளி பயணத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம், 'ஆயுள்சாட்' (AayulSAT) எனப்படும் தொழில்நுட்பமாகும். பெங்களூரை சேர்ந்த 'ஆர்பிட்-எய்ட்' நிறுவனம் உருவாக்கியுள்ள இது, விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் (On-orbit refuelling) முறையைச் சோதிக்கவுள்ளது. இது வெற்றி பெற்றால், எரிபொருள் தீர்ந்தவுடன் செயலிழக்கும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை விண்வெளி 'பெட்ரோல் பங்குகள்' மூலம் நீட்டிக்க முடியும். மேலும், ஹைதராபாத் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'MOI-1' செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் விண்வெளி செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தைக் கொண்டு செல்கிறது. இதில் உலகின் மிகக் குறைந்த எடையுள்ள (502 கிராம்) விண்வெளித் தொலைநோக்கியான 'மீரா' (MIRA) பொருத்தப்பட்டுள்ளது.
சைபர் கஃபே
விண்வெளியில் முதல் சைபர் கஃபே
சுமார் 400 கிலோ எடை கொண்ட அன்வேஷா செயற்கைக்கோள், ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் (Hyperspectral) இமேஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை மற்றும் விவசாய நிலங்களை மிகத் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். பிஎஸ்எல்வி-சி62 விண்கலத்தில் அன்வேஷாவுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான 'TakeMe2Space' உருவாக்கியுள்ள MOI-1 செயற்கைக்கோள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது விண்வெளியில் உலகின் முதல் சைபர் கஃபே (Cybercafe in space) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.