தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்!
டிக்டாக் செயலியை இந்தியாவில் தடைசெய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் தான் டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாகவும் நிறுவனத்தை மூடியது. தொடர்ந்து, டிக்டாக் செயலியை பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது இன்றுவரையில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை TikTok இன்னும் அணுகுவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியர்களின் தரவுகள் சீனாவில் எவ்வளவு அம்பலப்படுத்தப்படுகின்றன, தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்தியர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன், என்று டிக்டாக் ஊழியர் ஒருவர் ஃபோர்ப்ஸிடம் தெரிவித்தார். மேலும், தடை விதிக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவில் சுமார் 150 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை TikTok கொண்டிருந்தது. ஆனால், டிக்டாக் செயலியின் தலைவர் எந்த நாட்டுக்கும் தகவல் பரிமாற்றம் செய்யவில்லை என கூறியுள்ளார்.