
இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு;
செய்தி முன்னோட்டம்
Tiktok இந்திய ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது டிக்-டாக் தனது முழு இந்திய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள டிக்டாக் ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 தான் நிறுவனத்தில் அவர்களின் கடைசி நாள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசு சீன வீடியோ செயலியான TikTok ஐ தடை செய்து உத்தரவிட்டது. ஆனாலும் இந்தியாவின் டிக்-டாக் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், TikTok இந்த தாய் நிறுவனமான பைட் டான்ஸு இந்த வாரம் 40 பேருக்கு பிங்க் சீட்டுகளை வழங்கியுள்ளது.
மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் ஊழியர்களுக்கு ஒன்பது மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
டிக்டாக் இந்தியா
டிக்டாக் அலுவலகம் இந்தியாவில் திடீரென மூடல் - 40 ஊழியர்களின் நிலை என்ன?
டிக்டாக்கின் முடிவுக்கு காரணம் என்ன?
மேலும் சீன செயலிகள் குறித்து அரசின் நிலைப்பாட்டின் காரணமாக இந்தியாவில் அதன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது சாத்தியம் இல்லாத நிலையில் 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டிக்டாக் இந்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 கடைசி நாள் என்று கூறப்பட்டது.
இந்தியாவில், பல முன்னணி பொழுதுபோக்கு செயலிகள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நேரத்தில் டிக்டாக்-ன் 40 ஊழியர்கள் பணிநீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறினாலும் டிக்டாக்கின் சகாப்தம் இன்றோடு முடிந்துள்ளது.