ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையாக இருக்கிறதா? அவற்றை எவ்வாறு தடுப்பது?
ஸ்பேம் அழைப்புகள் பெரும்பாலும் நமக்கு தலைவலியாகவே மாறியுள்ளது. பொதுவாக இந்த தொல்லை தரும் அழைப்புகள், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் முதல் மோசமான ஃபிஷிங் முயற்சிகள் வரை மாறுபடும்- அவை உண்மையில் நமது ஸ்மார்ட் ஃபோன்களின் பாதுகாப்பை சமரசம் செய்து விடும். அதாவது உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படக்கூடும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், இந்த தேவையற்ற தொல்லைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கு உதவும் சில உள்ளமைக்கப்பட்ட அம்சங்கள் உங்கள் மொபைலிலேயே உள்ளன. எனவே, இந்த அம்சங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் அந்த ஸ்பேம் அழைப்பாளர்களைத் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த எளிய படிப்படியான வழிகாட்டியில் தெரிந்துகொள்ளலாம்!
ஸ்பேம் அழைப்புகளைக் கண்டறிதல்
ஸ்பேம் அழைப்பாளர்கள், போலியான தொண்டு நிறுவனங்களை உருவாக்குதல் அல்லது போலியான பரிசுகளை வழங்குதல் போன்ற அனைத்து வகையான தந்திரங்கள் மூலம் உங்கள் எண்ணைப் பெற முடியும். சில நேரங்களில், அவர்கள் தரவு வழங்குநர்களிடமிருந்து தொலைபேசி எண்களின் பட்டியலை வாங்குகிறார்கள். இந்த ஸ்பேம் அழைப்புகள் பல்வேறு வடிவங்களில் காட்டப்படும். அது தானியங்கு ரோபோகால் அல்லது வங்கிப் பிரதிநிதி போல் பாசாங்கு செய்யும் நபராக இருந்தாலும், தவறான சாக்குப்போக்கு தந்து உங்கள் தனிப்பட்ட தகவலை பெற்றுவிடும். எனவே, எப்போதும் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய அழைப்புகளின் போது முக்கியமான தகவல்களைப் பகிர வேண்டாம்.
உங்கள் மொபைலில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பேம் ஃபில்டரை பயன்படுத்துதல்
ஸ்பேம்-ஃபில்டர் அம்சங்களை வழங்கும் பல மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் தற்போது சந்தையில் உள்ளன. ஆனால் இந்தப் பணிக்கு எளிதான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த, உங்கள் மொபைலின் இயல்புநிலை டயலர் பயன்பாட்டைப் பயன்படுத்துவதே சிறந்தது. கூகுள் ஃபோன் பயன்பாட்டில் ஸ்பேம் ஃபில்டர் அம்சத்தை இயக்க: தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி, செட்டிங்குகளைத் தேர்வு செய்யவும். அடுத்து, அசிஸ்டிவ் பிரிவில் உள்ள காலர் ஐடி & ஸ்பேம் என்பதற்குச் சென்று, எரிச்சலூட்டும் எண்களைத் தானாகத் தடுக்க ஸ்பேம் அழைப்புகளை ஃபில்டர் என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்பேம் ஃபில்டர் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்தால் என்ன செய்வது?
சில நேரங்களில், கூகிள் அதன் ஸ்பேம் ஃபில்டர்களுடன் சில நேரங்களில் சரியாக பணி செய்யாமல் போகக்கூடும். உங்கள் கான்டக்ட்ஸ் லிஸ்டில் இருக்கும் நம்பர்கள் கூட பிளாக் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டால், ஸ்பேம் ஃபில்டர் அம்சத்தை ஆஃப் செய்து விட்டு, காலர் மற்றும் ஸ்பேம் ஐடியைப் பார்க்கும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இந்த வழியில், சந்தேகத்திற்குரிய ஸ்பேம் எண்களைப் பெறும்போது அல்லது அழைப்புகளைச் செய்யும்போது, தகவல் மற்றும் எச்சரிக்கைகளைப் பார்ப்பீர்கள்.
மூன்றாம் தரப்பு ஆப்களும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கலாம்
உங்கள் ஃபோனில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பேம் ஃபில்டர் இல்லை எனில், Truecaller போன்ற மூன்றாம் தரப்பு அழைப்பைத் தடுக்கும் செயலியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். இருப்பினும், ஒரு சிறிய எச்சரிக்கை: இந்த ஆப்ஸ்களில் பெரும்பாலானவை மிகவும் நம்பகமானவை என்றாலும், டெவலப்பர் உங்கள் தரவை விற்க அல்லது பகிர்ந்து கொள்ள எப்போதும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களால் முடிந்த போதெல்லாம், இயல்புநிலை ஸ்பேம் வடிகட்டுதல் முறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.