Page Loader
இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை
உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த... வாட்ஸ் அப் உருவானது எப்படி?

இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை

எழுதியவர் Siranjeevi
Feb 24, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

உலகமெங்கும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி பல அப்டேட்களை பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வாட்ஸ்அப் செயலியை கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 இல் தான் பிரையன் ஆக்டன் மற்றூம் ஜேன் கோம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. Yahoo ஊழியர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் ஆகியோர் கடந்த 2007ஆம் ஆண்டில் வேலையில் இருந்து விலகி கொஞ்சம் வாழ்கையை அனுபவிக்க ஊர் சுற்றத் தொடங்குகிறார்கள். இருந்தாலும், அந்த ஆண்டில் வேறு எந்த நிறுவனத்திலும் வேலைக்கு சேரும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அப்போது ஐபோன் நிறுவனம் ஆப் ஸ்டோரில் யார் வேண்டுமானாலும் ஆப்களை உருவாக்கி வெளியிடலாம் எனக்கூறியுள்ளது.

வாட்ஸ்அப்

உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த வாட்ஸ் அப் - உருவான கதை

இதன்பின் தான், அலெக்ஸ் பிஷ்மேன் என்ற மற்றுமொர் நண்பரை உடன் வைத்துக் கொண்டு சாட் செய்வதற்கான ஒரு ஆப்பை உருவாக்குகின்றனர். அப்போது ஐ போன் நிறுவனம் Push Notification எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதில், வாட்ஸ் அப் மற்றும் மெயில்களில் ஏதேனும் மெசேஜ் வந்தால், சத்ததுடன் ஒரு சின்ன ஐக்கான் டிஸ்ப்ளே முன் வந்து நிற்கும். அப்படி தான் வாட்ஸ் அப் செயலி அமெரிக்காவில் பட்டித்தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது. எந்தவித கட்டணமும் இன்றி இச்செயலியை வெளியிட்டனர். தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது. இப்போது தவிர்க்கமுடியாத ஒரு செயலியாக வலம் வருகிறது.