Page Loader
விண்டோஸ் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் போட்டோ ஷார்ட்கட் விண்டோஸ் பயனர்களுக்காக அறிமுகம்

விண்டோஸ் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

எழுதியவர் Siranjeevi
Feb 18, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியை மொபைல் போன், லேப்டாப், கணினி ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். அந்தவகையில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அம்சத்தில் புது அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. டெஸ்க்டாப் பதிப்பில் பீட்டா பயனர்களுக்கு புகைப்படம்/வீடியோ ஷார்ட்கட்டை WhatsApp வெளியிடுகிறது. இந்த புதிய அம்சம் வரும் நாட்களில் அதிகமான பயனர்களுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பயனர்கள் இழுத்து விடுதல் மற்றும் 'கோப்பு' எனப்படும் பிற பகிர்வு விருப்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே மீடியாவைப் பகிர முடிந்தது, இருப்பினும், இந்த விருப்பம் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆவணங்களாகப் பகிர மட்டுமே அனுமதித்தது.

வாட்ஸ்அப்

டெஸ்க்டாப் பதிப்பில் புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ் அப்

மேலும், 2ஜிபி அளவு வரையிலான ஆவணங்களைப் பகிரும் திறனைப் பற்றி பயனர்களை எச்சரிக்க, பயன்பாட்டில் உள்ள அறிவிப்பு பேனரில் WhatsApp செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இது பீட்டா iOS 23.3.0.76 புதுப்பிப்பின் ஒரு பகுதியாகும், விரைவில் கிடைக்கும். சமீபத்தில் ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடிகின்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. இதனால் இனி இதற்காக கூகுள் டிரைவை சார்ந்து பயனர்கள் இருக்க வேண்டி இருக்காது எனவும் கூறியிருந்தனர். மேலும், சாட் அல்லது குரூப்களுக்குள் தேவையான மெசேஜ்களை PIN செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.