NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?
    செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள் நிறுவனம்.

    செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?

    எழுதியவர் Srinath r
    Nov 29, 2023
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் நிறுவனம் செயலற்ற கணக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல், செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தொடங்குகிறது.

    கடந்த மே மாதம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்நிறுவனம், டிசம்பர் 1 ஆம் தேதி முதல், இரண்டு வருடங்கள் செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என அறிவித்திருந்தது.

    இந்தத் கொள்கையின்படி, ஜிமெயில் கணக்குடன் தொடர்புடைய, டாக்ஸ், யூடியூப், கூகுள் புகைப்படங்கள், காலண்டர் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து தகவல்களும் நீக்கப்படும்.

    2nd card

    கூகுள் நிறுவனம் ஏன் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குகிறது?

    கூகுள் நிறுவனத்தின் இத்திட்டத்திற்கு, அந்நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்கவில்லை.

    இருப்பினும், நீண்ட காலமாக செயலற்று இருக்கும் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பில் சமரசம் ஏற்படலாம் என்றும்,

    பழைய கடவுச்சொற்கள் மற்றும் இரண்டு காரணி அங்கீகாரம்(two-factor authentication.) ஆகியவை இருக்காது என்பதால், அந்த கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்குவதாக கூறப்படுகிறது.

    எனினும், இது செயல்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளில் இருந்து தரவுகள் அளிக்கப்படுவதை தவிர்க்கவும், பழைய கணக்குகளை நிர்வகிக்கும் வாய்ப்பையும் மக்களுக்கு வழங்குகிறது.

    3rd card

    ஜிமெயில் கணக்குகளை எப்படி பாதுகாப்பது?

    டிசம்பர் 1 தேதி தேதிக்கு பின், உங்கள் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படுவதை தவிர்க்க, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது உங்கள் கணக்கில் லாகின் செய்வது நல்லது.

    லாகின் செய்யப்பட்ட உங்கள் ஜிமெயிலில், மின்னஞ்சல்களை படிப்பது, நாட்காட்டியை பார்ப்பது, பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்டவற்றை, கூகுள் உங்கள் கணக்கு செயல்படுவதாக காண்கிறது.

    மேலும், உங்கள் ஜிமெயில் கணக்குடன் நீங்கள் எளிதாக அணுகக்கூடிய மீட்பு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது நல்லது. இதன் மூலம் கடவுச்சொல்லை மறந்தாலும் உங்கள் பழைய கணக்குகளை மீட்க முடியும்.

    கூகுள் நிறுவனமும், உங்கள் பழைய கணக்குகளை நீக்கும் முன், மீட்பு மின்னஞ்சல் முகவரிக்கும், இது குறித்த மின்னஞ்சல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    யூடியூப்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    கூகுள்

    Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை! சுந்தர் பிச்சை
    ஷாருக்கானின் ஜவானைக் கொண்டாடும் கூகுள் ஷாருக்கான்
    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள் கேட்ஜட்ஸ்
    தேடுபொறியிலும் எமோஜி 'கிட்சன் வசதியை' அறிமுகப்படுத்தியது கூகுள் வாட்ஸ்அப்

    யூடியூப்

    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்? மத்திய அரசு
    தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப் கேம்ஸ்
    பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம் சமூக வலைத்தளம்
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025