கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள்
செய்தி முன்னோட்டம்
கூகுள் பிளே ஸ்டோர் பயன்பாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும், பயனர்கள் தங்கள் தரவு பயன்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள கொள்ள வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொள்கை ஆனது, 31 மே, 2023 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
இதனால், ஆன்லைன் கடன் ஆப்களுக்கும் கூகுள் நிறுவனம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனவே உங்கள் செல்போனில் கடன் வழங்கும் ஆப்கள் இருந்தால், அதில் உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாப்பாக இருந்தால், அந்தத் டேட்டாவை நீக்குவது அல்லது மே 31-க்கு முன் டேட்டாவைப் பாதுகாப்பது நல்லது.
இல்லையெனில் மே 31-க்குப் பிறகு உங்களின் தனிப்பட்ட டேட்டா நீக்கப்படும். ஆன்லைன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்த புகார்கள் அதிகம் அரசிடம் எழுந்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர்
பயனர்களின் பாதுகாப்புக்காக கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை வெளியிட்டது
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக கூகுள் ப்ளே ஸ்டோர் தனது பாலிசிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
கடன் வழங்கும் ஆப்கள் தங்களது லைசன்ஸ் அல்லது பதிவு ஆவணங்களை கூகுள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து, இந்தக் கொள்கைப் அப்டேட்டிற்கு பிறகு, பயனர்களின் வெளிப்புறச் ஸ்டோரேஜிலிருந்து போட்டோகள், வீடியோக்கள், தொடர்புகள், மற்றும் கால் ரெகார்ட்களை ஆப்ஸ்களால் அணுக முடியாது.
புதிய தரவுக் கொள்கையைச் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Google செயல்படுத்தும்.
அதுவரையில் டெவலப்பர்கள் தங்கள் பயன்பாட்டின் தரவுப் பாதுகாப்புக்கான கேள்விகளுக்கான பதில்களை டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.