Page Loader
கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர்
கூகுளின் பணிநீக்கம் தவறான முறையில் நடந்தது - ஊழியர்கள் குமுறல்

கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர்

எழுதியவர் Siranjeevi
Feb 28, 2023
01:04 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரத்திற்கு முன்பு 12,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதன் பின் மீண்டும் பணி நீக்கமாக 450 பேரை நீக்கியது. பல நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் கூகுளும் முக்கிய பங்கு வகித்தது. இதில், பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி உள்ளவர்களும் திறமையானவர்களும் கூட வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, பல ஊழியர்கள் தங்கள் கருத்தை லிங்க்ட் - இன் பக்கத்தில் பதிவு செய்யும் நிலையில், கூகுள் ஊழியர் ஹர்ஷ் விஜயவர்கியா கூகுளை பற்றி பேசியுள்ளார்.

கூகுள் பணிநீக்கம்

கூகுளின் பணிநீக்கத்தை பற்றி ஊழியர்களின் குமுறல்

அவர் தெரிவித்ததில், 12,000 தொழிலாளர்களில் தானும் ஒருவன் என்பதை அறிந்ததும் வாயடைத்துப் போனதாகவும், அந்த மாதத்திற்கான "ஸ்டார்" நடிகருக்கான பேட்ஜை அவருக்கு வெகுமதி அளித்த பிறகும் கூகுள் அவரை பணிநீக்கம் செய்ததாக அந்த ஊழியர் வலியுறுத்தினார். மேலும், அவருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், நன் நட்சத்திர ஊழியராக இருந்தும் ஏன் என்ற பதிலை கேட்டுள்ளார். எனவே, ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூகுள் முன்னர் தெளிவுபடுத்தியது. அந்த ஊழியர், இரண்டு மாதங்களுக்கு தனது சம்பளம் பாதி என்றும், பணிநீக்க முடிவு தனது நிதித் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது எனவும், ரொம்ப கடினமாக இருந்தது என தெரிவித்துள்ளார். இவரைப்போன்று, அனிமேஷ் என்பவர் கூறுகையில், இந்தியாவில் பணிநீக்கம் நிச்சயமாக செயல் திறன் அடிப்படையில் இல்லை எனக்கூறியுள்ளார்.