LOADING...
உங்கள் பிஸினஸிற்கு விளம்பர தரத்தில் படங்களை தரும் AI தொழில்நுட்பம்; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்
தற்போது Pomelli இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

உங்கள் பிஸினஸிற்கு விளம்பர தரத்தில் படங்களை தரும் AI தொழில்நுட்பம்; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
03:06 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கூகுள் லேப்ஸ் (Google Labs) உருவாக்கியுள்ள 'Pomelli' தளத்தில் 'போட்டோஷூட்' எனும் புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் அதன் வெற்றிக்கு பிறகு, தற்போது இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூகிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிறு தொழில் முனைவோர்களுக்கு எளிதாக தங்கள் தயாரிப்புகளை ஒரு பிரமாண்ட ad shoot அளவிற்கு காட்சிப்படுத்த இந்த செயலி உதவும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

செயல்பாடு

Photoshoot எவ்வாறு செயல்படுகிறது?

இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிது. பயனர்கள் தங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட சாதாரண Product Image-ஐ பொமெல்லி தளத்தில் பதிவேற்ற வேண்டும். கூகுளின் 'Nano Banana' தொழில்நுட்பம் மற்றும் 'Business DNA' உதவியுடன், அந்தப் படத்தின் வெளிச்சம், பின்னணி மற்றும் தரம் ஆகியவற்றை ஏஐ தானாகவே ஒரு புரொபஷனல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது போல மாற்றுகிறது. பயனர்கள் "பின்னணியை ஒரு காட்டிற்கு மாற்று" என்று டைப் செய்தால் போதும், சில நொடிகளில் படம் அதற்கேற்ப மாறிவிடும். ஒரு தயாரிப்பின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த விளம்பர வடிவமைப்பையும் இத்தளம் உருவாக்கித் தருகிறது.

Advertisement

அச்சுறுத்தலா?

வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலா?

இந்த தொழில்நுட்பம் சிறு வணிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தாலும், இது வணிக ரீதியான புகைப்படக் கலைஞர்கள், ஸ்டுடியோ உதவியாளர்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளின் வேலைவாய்ப்பிற்குச் சவாலாக அமையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. உயர்தர விளம்பரப் படங்களுக்கு இப்போதைக்கு பாதிப்பு இல்லை என்றாலும், சாதாரண தயாரிப்புப் படங்களுக்கான சந்தையை இந்த ஏஐ மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. சமீபம் வரை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இலவசமாக கிடைத்து வந்த இந்த வசதி, தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement