LOADING...
மீண்டும் 453 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்!
கூகுள் நிறுவனத்தில் 453 பேர் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது

மீண்டும் 453 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Feb 17, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாகவே உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொருளாதாரம் மந்த நிலை காரணமாக, ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருவதால் பல ஆயிரம் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகவே மாறியுள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 453 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதற்கு முன் ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதனிடையே, கூகுளின் குருகிராம் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கு மேலாளரான கமல் டேவ் , தனது பணிநீக்கம் குறித்து லிங்க்ட்இனில் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியா கூகுள் நிறுவனங்களில் நடக்கும் பணிநீக்கங்களில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

கூகுள் பணிநீக்கம்

12 ஆயிரம் ஊழியர்களை தொடர்ந்து 453 பேர் மீண்டும் கூகுள் நிறுவனத்தில் பணிநீக்கம்

கூகுளில், எனது ஆற்றல்கள் இந்தியாவில் உள்ள உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள பல தொழில்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் இலக்குகளை வழங்குவதாகும், மூலோபாய கணக்கு மேலாளர், ஆலோசகராக பணியாற்றினேன்" என தெரிவித்துள்ளார். மேலும், 12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து இதற்கு முன் சுந்தர் பிச்சை தெரிவிக்கையில், "நிறுவனத்தின் முதலீடு, மூலதனம் செயல்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்க மற்றும் மறுவரையரை செய்து, அதன் வெளிப்பாடாக இந்த பணிநீக்கம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்திருந்தார். எனவே, கூகுள் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதன் ஒரு பகுதியாக கூகுள் மூத்த பதவிகளில் உள்ள சீனியர் அதிகாரிகள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ளப்போவதாகவும், அதில் சுந்தர் பிச்சையும் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறியதும்" குறிப்பிடத்தக்கது.