தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏற்றம் அடைய தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம் விலையால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,374-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய நாளின் விலை விபரங்கள்;
மேலும், தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய (07.02.2023) நிலவரப்படி காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 984-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,373 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நாளில், (08-02-2023) காலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,000க்கு விற்கப்படுகிறது.