பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. பின்னர், ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் விலை சில நாட்கள் ஏறுவதும், சில நாட்கள் இறங்குவதுமாக இருந்து வந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏற்றம் அடைய தொடங்கியுள்ளது. தங்கம் விலை இந்த நிலையில் சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு - விலை விபரங்கள்;
வெள்ளியின் விலை: வெள்ளியின் விலை, ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டிவெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில், ஒரு கிராம் ரூ.5,290 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.42,320 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஹைதராபாத்தில், இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 என்றும் சவரனுக்கு ரூ.42,200 என்றும் விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,755 என்றும் சவரனுக்கு ரூ.46,040 என்றும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.