மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்;
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே இறங்கி வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று (ஜன 22) 1 பவுன் தங்கம் ரூ.42,560-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ.42,584-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5320-க்கு விற்கப்பட்டது. இன்று காலை (23/01/2023) கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ரூ.5323-க்கு விற்கப்படுகிறது. மேலும், சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,685 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை விபரம்
அதேபோல் வெள்ளி விலையும் இன்று (23/01/2023) அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.30-க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையின் தொடர் ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு, போர் காரணமாக கடந்த ஆண்டில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரிப்பதால், ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக இருந்தாலும் நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.