மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது சரிய தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். தற்போது நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்து 42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஜன.21ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் சரிவு
இதேப்போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.200 குறைந்து ரூ.74,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு, போர் காரணமாக கடந்த ஆண்டில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலே, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் சரிந்தது. மேலும் பங்குச் சந்தையின் ஏற்றத்தாலும் தங்கம் விலையில் அன்றாடம் ஏற்றம் இறக்கமும் உண்டாகிறது. வல்லுணர்களின் கணிப்பின் படி தங்கம் விலையானது ஒரு சில நாட்களில் குறைந்தாலும், வரும் நாட்களில் அதன் உயர்வு மீண்டும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.